திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் பூதிபுரம் ஊராட்சி பூதிபுரத்தில் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடந்தது. 850 வாக்காளர்கள் கொண்ட ஒரு ஊராட்சி அதில் 35 பேர் மட்டும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு சரியான முறையில் கிராம சபை கூட்டம் சம்பந்தமாக விழிப்புணர்வு அளிக்கவில்லை தகவல் கொடுக்கவில்லை. முக்கிய அதிகாரிகள் வரவில்லை. ஜோனல் கிராம நிர்வாக அதிகாரி துணைத் தலைவர் மற்றும் கிராமத்தில் உள்ள மற்ற அதிகாரிகளும் வரவில்லை கிராம சபை கூட்டம் முறைப்படி நடக்கவில்லை. பொதுமக்களிடம் சுமார் 15 கையெழுத்து மட்டும்தான் கூட்டத்தில் வாங்கினார். பூதிபுரம் ஊராட்சியில் தொடர் தண்ணீர் பிரச்சனையை பற்றி பொதுமக்கள் தலைவரிடம் கேள்வி எழுப்பிய போது பொது மக்களுக்கு பதில் கூற முடியாதபோது கூட்டத்தை கலைத்து சென்றனர்.