திண்டுக்கல்லை அடுத்துள்ள நரசிங்கபுரம், மாதாமலை நகர் பகுதியை சேர்ந்த யூஜின் (24) என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் யூஜினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.