திண்டுக்கல் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக DSP. சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் காவலர்கள் செல்வராஜ், காளீஸ்வரர் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முள்ளிப்பாடி, செட்டியபட்டி பிரிவு அருகே கஞ்சா விற்பனை செய்த N.S. நகரை சேர்ந்த ராஜேஷ் மகன் சந்தோஷ்(19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா, பல்சர் டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.