திண்டுக்கல்: கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

51பார்த்தது
திண்டுக்கல்: கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த முனியாண்டி என்பவர் காந்திஜி புது ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாறைமேட்டு தெரு பகுதியை சேர்ந்த சௌந்தரம் மகன் ஆண்டவர் (27) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக முனியாண்டி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்டவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி