திண்டுக்கல்லை சேர்ந்த 23 வயது பெண்ணின் பெயரில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு துவங்கி அதில் ஆபாசமாக பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து பெண்ணின் உறவினர்களிடம் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசியதாக பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி. பிரதீப்பிடம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் ADSP. தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி தலைமையில் தொழில்நுட்ப ஆய்வாளர் லாய்டு மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விமல்(31) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.