திண்டுக்கல் ரயில் நிலையம் நடைமேடை 1 மற்றும் 3-ல் தனியார் கல்லூரி மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரயில் நிலைய மேலாளர் செந்தில்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் இயற்கை வளத்தை பாதுகாப்போம், மரங்களை பாதுகாப்போம், பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் என்று முழக்கமிட்டுச் சென்றனர். இந்நிகழ்வில் பயணிகளுக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.