திண்டுக்கல்: கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் தர்ணா

72பார்த்தது
திண்டுக்கல் விவேகானந்தா நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் குளத்தூரை சேர்ந்த மேனகாதேவி ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆறு மாதங்கள் மட்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் மேனகா தேவியின் கணவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாழ விருப்பம் இல்லை என கோரி திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேனகா தேவி ஆகஸ்ட் மாதம் தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என எதிர் மனு கொடுத்துள்ளார். இவ்வழக்கு விசாரணையானது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 14. 11. 24 தேதி திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்றத்தில் இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து சமரச தீர்வு காண நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நான்கு மாதங்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேனகா தேவியை தனது கணவர் வீட்டிற்குள் நுழைய விட வில்லை என கூறி விவேகானந்தா நகரில் உள்ள மேனகா தேவியின் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த மகளிர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மேனகா தேவியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன், 4 மாதமாக பேச்சுவார்த்தைக்கு எங்களை கணவர் மற்றும் அவரது வீட்டார் அழைக்கவில்லை. கணவருடன் தான் வாழ்வேன் என்று தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி