திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வண்ணார் பேரவையின் மாநில செயற்குழு கூட்டத்தில்
தமிழ்நாடு அரசுக்கு வண்ணார் பேரவையின் சார்பாக கோரிக்கைகளாக. MBC பட்டியலில் உன் வண்ணார் போன்ற சிறுகுரு சமூகங்களை இணைத்து மிக மிக பிற்படுத்தப்பட்ட பட்டியலில் MMBC பட்டியலை உருவாக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். அயன் வண்டி தொழிலாளர்களுக்கான இலவச மானிய மின்சாரம் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். நெசவாளர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது போல அயனிங் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும் நூறு யூனிட் மின்சார வழங்க இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குலத் தொழில் திட்டத்தை ஒட்டி உள்ள விஸ்வகர்ம திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்காது எனக் கூறிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய மோடி அரசை இந்த மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அதேபோல் மழைக்காலங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக அரசு பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த மாநில செயற்குழுவில் 30 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.