திண்டுக்கல்: கணக்கில் வராத ரூ. 1377900 பணம் பறிமுதல்

80பார்த்தது
நாகர்கோயில் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் சென்னையில் கணக்கில் வராத பணம் 13 லட்சத்து 77 ஆயிரத்து 900 ரூபாய், ஒரு கருப்பு கலர்பேக்கில் எடுத்துக்கொண்டு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது. திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து கஞ்சா சோதனை செய்து வந்துள்ளனர். இதில் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வந்தவுடன் அதில் சோதனை செய்த பொழுது நவநீதகிருஷ்ணன் கருப்பு பை வைத்திருந்தால் அதை சோதனை செய்தது ரூபாய் 13 லட்சத்து 77 ஆயிரத்து 900 இருந்தது. பணத்தை கைப்பற்றப்பட்டு அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். பணத்திற்கு உரிய ஆதாரம் இல்லாமல் இருந்ததும் காவல்துறையிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு நபரிடம் நாகர்கோவிலில் இருந்து கொண்டு சென்ற வெளிநாட்டு கரன்சி பணத்தை மாற்றிவிட்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் வருமானவரித்துறை மதுரை அதிகாரிகளிடம் தகவல் கூறிய நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளும் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருமான வரித்துறையினர் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி