குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான "திருக்குறள்" வினாடி-வினா முதல்நிலைப் போட்டி தேர்வு இன்று(21.12.2024) திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற்றது. மேற்படி தேர்வு கொள்குறி வகை (Objective Type Test) முறையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி, பட்டயக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் என மொத்தம் 287 நபர்கள் பெயர் பதிவு செய்திருந்தனர். அதில் 217 நபர்கள் தேர்வு எழுதினர். திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதிபெறும் 3 குழுக்கள் (ஒரு குழுவிற்கு தலா 3 நபர்கள் வீதம் மொத்தம் 9 நபர்கள்) தேர்வு செய்யப்பட்டு 28.12.2024 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.