திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தை பார்ப்பதற்காக விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் வருகை தந்தனர்.
திரையரங்கம் இருக்கும் சாலை மாநகராட்சியின் முக்கிய சாலைகளாக உள்ளது. குறிப்பாக இந்த சாலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இடையூறாக தடை செய்யப்பட்ட அதிக சத்தம் ஏற்படுத்தும் வெடிகளை பயன்படுத்தினர்.
மேலும், விக்ரம் பார்க்க வந்த ரசிகர்களால் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், நடிகர் விக்ரமை பார்க்க முதல் மாடியில் கண்ணாடிகளை உடைத்து ஆபத்தான முறையில் திரையரங்குகள் சென்ற ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திரையரங்குக்குள் வந்த விக்ரம் காரை விட்டு இறங்க விடாமல் ரசிகர்கள் கார்களுக்கு மேல் ஏறினர்.
இதனால் காரின் உள்ளே இருந்து விக்ரம் திரையரங்குக்குள் எவ்வாறு வர முடியும் என ரசிகர்களிடம் கோபத்துடன் பேசினார். அதன் பின்பு திரையரங்குளிருந்து வந்த பவுன்சர்கள் மிகவும் கஷ்டப்பட்டு விக்ரமை உள்ளே அழைத்து சென்றனர்.
திரையரங்கம் உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் திரையரங்குக்குள் சென்று ரசிகர்களை பார்க்காமல் மீண்டும் வெளியேறினார்.