திண்டுக்கல்: மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கிய ஆசிரியர்கள்

55பார்த்தது
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று 02. 06. 25 முதல் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்தது.

இதனையடுத்து பள்ளி வகுப்பறைகள், வளாகம், மற்றும் மைதானங்களை ஆசிரியர்கள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் அடுத்துள்ள செட்டி நாயக்கன்பட்டி மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பெற்று வருகின்றனர்.

இப்பள்ளிக்கு செட்டிநாயக்கன்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அந்த வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் நாள் தோறும் பள்ளிக்கு வருவது வழக்கம்.

இதனை அடுத்து பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அனுவித்து பரிசுகள் கொடுத்து கௌரவித்தனர்.

பின்னர் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவ மாணவிகுக்கு தங்களது சொந்த செலவில் பேனா, பென்சில், சாக்லேட் மற்றும் ரோஜா பூ கொடுத்து வரவேற்று பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பள்ளி வளாகத்தில் பிரேயர் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் அரசு இலவசமாக வழங்கிய நோட்டுப் புத்தகங்கள் வழங்கி வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி