திண்டுக்கல்லில் தமிழக அரசை வலியுறுத்தி சத்துணவு திட்டத்தில் 3000 ரூபாய் ஊதியத்தை திட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் சத்துணவு திட்டத்தில் 897 சமையல் உரிமையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை வரவேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க வட்டார தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் வட்டார செயலாளர் முருக வள்ளி விளக்க உரையாற்றினார். அதனை தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.