திண்டுக்கல்: பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி; பரபரப்பு

72பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட கம்பிளியம்பட்டி ஊராட்சி காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் முருகன். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இதே பகுதியில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பதாகவும், அதில் பல்வேறு விவசாயிகள் செய்து வந்தனர். சூழ்நிலையில் இதே ஊரை சேர்ந்த திமுக பிரமுகர் வேலுமணி அவரது மகன் சரவணபிரசாத் ஆகியோர் அருகிலேயே விஷ வெள்ளரி நிறுவனம் நடத்தி வருவதாகவும், இந்த நிறுவனத்தில் இருந்து வரும் கழிவுகள் அனைத்தும் செல்வம் முருகன் விவசாய நிலத்திற்குள் பாய்ச்சுவதாகவும் கூறப்படுகிறது.

புகார் அளித்ததன் காரணமாக கோபம் அடைந்த வேலுமணி மற்றும் அவரது மகன் சரவண பிரசாத் ஆகிய இருவரும் செல்வம் முருகன் விவசாய நிலத்திற்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். செல்வம் முருகன் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று செல்வம் முருகன் மற்றும் அவரது மனைவி, தாயார், குழந்தைகள் இருந்த நிலையில் திமுக பிரமுகர் வேலுமணி வீட்டிற்கு வந்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறி, இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் பெட்ரோல் கேனை புடுங்கி தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

தொடர்புடைய செய்தி