பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் இனவெறி ஆக்கிரமிப்பு போரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகேஷ், மாவட்ட பொருளாளர் பிரேம்குமார், நிர்வாகிகள் அசோக், ரஞ்சித், சூர்யா, சபரி, தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.