திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ளது சித்தி விநாயகர் திருக்கோயில் கடந்த 2005 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்து கோயில் மற்றும் கோபுரம் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி, முதல் கால பூஜை ஆக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் தன பூஜை வாஸ்து சாந்தி ரக்ஷா பந்தனம், நான்காம் கால பூஜையாக பூர்ணாகுதியுடன் சிவாச்சாரியார்களால் வேள்வி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு கோவில் முழுவதும் வலம் வந்து கோபுர கலசங்களில் சென்றடைந்தது. புனித நீர் அடங்கிய கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீசித்தி விநாயகர், பரிவார தெய்வங்களான ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ ஆனந்தவல்லி, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தண்டாயுதபாணி, ஸ்ரீ சுப்பிரமணியர், நவகிரகம் மற்றும் ஸ்ரீ பைரவர் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தீப தூப தீராதனை காண்பிக்கப்பட்டது.
திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.