தமிழ்நாடு கலைப் பண்பாட்டு துறை சார்பில் அரசின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு சங்கமம் நம்ம ஊரு திருவிழா குழுக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கலைஞர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நாடக மேடையில் கலைஞர்கள் தேர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் ஒரு குழுவிற்கு 15 பேர் வீதம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தில் சிறப்பாக திறன்களை வெளிப்படுத்திய குழுக்கள் என மாநில அளவில் 40 குழுக்களும், 7 மண்டல அளவில் குழுக்களுக்கான தேர்வு முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு குழுவினருக்கும் தலா 6 நிமிடம் தங்களது திறன்களை வெளிப்படுத்த நிர்ணயிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளின் காட்சிகள் கலைப் பண்பாட்டுத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அதில் குழுக்களின் திறமைக்கேற்றவாறு மாநிலம் மற்றும் மண்டல குழுக்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, நத்தம் , ஆத்தூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட குழுவினர் முகாமில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.
சிலம்பாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம், நாடகம், கரகாட்டம், சாமி ஆட்டம், மல்லன் கம்பம், நையாண்டி மேளம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.