திண்டுக்கல்: சாலையோர வியாபாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

61பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான வரி வசூல் செய்வதற்கான டெண்டர் விடப்பட உள்ளது.

இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் குழு செயலாளர் ஜெயசீலன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,

"சாலையோர வியாபாரிகளுக்கான டெண்டர் தனி நபர்கள் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள், பல தட்டு வியாபாரிகள், பூ வியாபாரிகள் குழுவாக சேர்ந்து டெண்டர் எடுக்கலாம்.

ஆனால், சாலையோர வியாபார குழுவும் கலந்து கொள்ளாத வண்ணம் திண்டுக்கல் மாநகராட்சி டெண்டர் விடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இது மாநகராட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது.

சாலையோரம் வியாபாரிகளை காப்பதற்கு மத்திய அரசில் சட்டம் உள்ளது. தேர்தல் நடத்தி சாலையோர வியாபாரிகளை ஒன்று கூட நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறை இருந்தது. மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு 5 வருடம் கடந்து இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு வரன்முறை எதுவும் செய்யப்படவில்லை.

தனிநபர்கள் டெண்டர் எடுக்கும் பட்சத்தில் பேருந்து நிலையம் வெளியே கடை நடத்துபவர்களிடமும் வரி வசூல் நடைபெறுகிறது. ஆனால், அவர்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை இதுபோன்ற முறை கேட்டால் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது" என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி