திண்டுக்கல்: மத நல்லிணக்க கந்தூரி விழா

68பார்த்தது
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் வருடப்பிறப்பாகவும் ஆசேன், உசேன் நினைவு தினத்தையும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்கள் முக்கிய தினமான இந்த மொகரம் பண்டிகையை திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பள்ளிவாசல் ஜமாத் சார்பாக இந்த மொகரம் திருநாளை மத நல்லிணக்க நாளாக நினைவுகூர்ந்து மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவில் 500 கிலோ அரிசி, 300 கிலோ கத்திரிக்காய், 100 கிலோ தக்காளி, 75 கிலோ இஞ்சிப்பூண்டு உள்ளிட்டவைகளைக் கொண்டு கந்தூரி எனப்படும் அன்னதானமானது தயாரிக்கப்பட்டது. இந்த விழாவில் ரவுண்ட் ரோடு புதூர், அனுமந்த நகர், பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம், நாகல் நகர், வேடப்பட்டி, குள்ளளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி