ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை முதல் மாலை வரை அன்னம் ஆகாரம் இன்றி நோன்பிருந்து மாலை வேளையில் நோன்பு திறப்பார்கள்.
அதன் அடிப்படையில் திண்டுக்கல் நாகல் நகர் சிறுமலை செட்டு ரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மத நல்லிண இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கிழக்குப் பகுதி தலைவர் யாசர் அராபத் தலைமையில் நடைபெற்றது.
அப்துல் ரகுமான் யூ சி பி, நிஜாம் மைதீன் உமரி ஆகிய இமாம்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன், திமுக பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜீலுல் ஹக் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஜாதி மத பேதமின்றி 500க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.
பேரிச்சம்பழம், திராட்சை, அன்னாசி பழம், சர்பத் ரோஸ் மில்க், கஞ்சி, வடை உள்ளிட்ட உணவு வகைகள் நோன்பு திறக்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட தலைவர் ஷேக் பரீத், நிர்வாகிகள் இமாம் முஹம்மது ஆசிக், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.