திண்டுக்கல்: மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

85பார்த்தது
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் மார்ச் இரண்டாம் தேதி துவங்கியது. ரமலான் மாத முதல் நாளிலிருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று விரதம் இருந்தனர். திண்டுக்கல் மாவட்ட திருவருட் பேரவை சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திருவருட் பேரவை தலைவரான ரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இஸ்லாமியத்தின் மேன்மை குறித்தும், ரமலான் மாதத்தின் சிறப்புகளையும், நோன்பின் மகத்துவங்கள் குறித்தும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டவர்கள் எடுத்துரைத்தனர்.

பின்னர் மாலை 6: 30 மணி அளவில் துஆ ஓதிய பின் முதலில் ஈச்சம் பழம் உண்டு, பழரசம் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பினை திறந்தனர். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், திருவருட்பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி