திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் மாநகர திமுக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்தநாள் செம்மொழி நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 19 ஆவது வார்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு திண்டுக்கல் மாநகரச் செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா தலைமை வகித்தார். இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞரின் சிறப்பான திட்டங்களை எடுத்துரைத்தார். பின்னர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் கலந்து கொண்டார். இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மார்க் கிரேட் மேரி, பிலால் உசேன், மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் ஜெயன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மாநகரப் பொருளாளர் மீடியா சரவணன், மாவட்ட விவசாய அணி இல கண்ணன், இலக்கிய அணி முருகானந்தம், கிளைக் கழக நிர்வாகிகள் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.