திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக, ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ. பெ. செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில், திமுக கழக துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய அரசை கண்டித்து தலைமைக் கழக பேச்சாளர் வயலூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
மேலும் நிகழ்வில் திண்டுக்கல் மாநகரச் செயலாளர் ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதிஜோதிபிரகாஷ் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர், பகுதிச் செயலாளர்கள் கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.