தீபாவளி பண்டிகை இன்று அதிகாலை முதலே கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி கோவில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பின்னர் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இது ஒரு புறம் இருக்க வீடுகளில் அசைவ உணவு என்பதை இன்று மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் நாகர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் ஆடு, வான்கோழி , நாட்டுக்கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.