திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்தக் கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். சரத்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச் செயலர் கே. பிரபாகரன், நகரச் செயலர் ஏ. அரபு முகமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனர்.
நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு, வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவிலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லாதது, தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.