திண்டுக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று (ஜனவரி 3) தொடங்கியது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் பரிசு தொகுப்பை பெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. திண்டுக்கல் கோவிந்தாபுரம் மற்றும் வீரபாண்டி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகித்து வருகின்றனர்.