திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நெகிழி இல்லா பசுமை திண்டுக்கல், என்னும் விழிப்புணர்வு பேரணியை உதவி காவல் கண்காணிப்பாளர் சிபின் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 28 வகையான நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பிளாஸ்டிக் பையை விடு மஞ்ச பையை எடு, நெகிழி வாங்காதே நம்ம பூமி தாங்காதே, வாழை இலை சாப்பாடு நீண்ட ஆயுள், நெகிழியிலே சாப்பாடு ஆயிசுக்கு கேடு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவ மாணவியர் பேரணியில் கலந்து கொண்டனர்.
அதேபோல் புகை நமக்கு பகை என்ற அடிப்படையில்போகி பண்டிகைக்கு பழைய டயர் சைக்கிள் டியூப் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என்றும் விழிப்புணர்வை கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாசு கட்டுப்பாட்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் குணசேகரன் உதவி பொறியாளர்கள் உஷாராணி, அனிதா, தாரணி, மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.