திண்டுக்கல்: ஏக்கருக்கு 50, 000 இழப்பீடு வழங்க கோரி மனு

79பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வையாபுரி கண்மாய், சின்ன கலையம்பத்தூர், பால சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் ஜோதி மட்டை ரகம் என்ற நெல் விதைகளை வாங்கி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்பொழுது அறுவடை காலம் நெருங்கி உளள நிலையில் நெற்பயிரில் மணி பிடிக்காமல் ஊசி கதிர் ஆகவும் வெறுங்கதிராகவும் இருப்பதால் சாகுபடி செய்த விவசாயிகள் பேரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தமிழக அரசு ஏக்கருக்கு 50, 000 இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் நெற்பயிர்களுடன் சுமார் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி