திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் வரலாமா நதி உள்ளது, அதன் குறுக்கே வரதமா நதி அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தண்ணீர் வசதி பெற்ற ஆயக்கட்டு நிலங்களாக உள்ளது.
அணை நிரம்பி உபரி நீர் வரும்போது பாபன் கால்வாய் வழியாக சென்று பாப்பன்குளம், கணக்கன்பட்டி குளம், அமர பூண்டி குளம், அதன் பின்பு நல்லதங்காள் ஓடை வழியாக சென்று கொத்தையும் அணைக்கட்டு, பொருளூர் குளம், பருத்தியூர் குளம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி நல்லதங்காள் அணைக்கட்டு, குளத்துப்பாளையம் உடையார் குளம் ஆகியவை பயன்பெறுவதற்கு வரதமா நதி அணைக்கட்டில் இருந்து உபரி நீர் வரும்போது கொண்டு செல்வதற்கான பாப்பன் கால்வாய் மற்றும் பாப்பன்குளத்தில் இருந்து நல்லதங்காள் ஓடைக்கு செல்லும் நீர் வழிப்பாதை ஆகியவை சிதலமடைந்து கிடப்பதை சீரமைத்து தூர்வாரி கொடுக்க வேண்டும்,.
கால்நடைகளுக்கு விவசாயத்திற்கு குடிநீருக்கு என அனைத்து பயன்களுக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், பாப்பன் கால்வாய் மற்றும் நல்லதங்காள் வாடைக்கு செல்லும் நீர்வழிப் பாதையை அகலப்படுத்தி சீரமைப்பு செய்து தர கோரிக்கை வைத்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக 20 ற்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.