திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் இருந்து தரம் உயர்த்தப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது.
மருத்துவமனை சுற்றிலும் கிழக்கு மேற்கு தெற்கு ஆகிய திசைகளில் ஏழு வழி கேட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு கேட்டுகள் மட்டும் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மற்ற ஐந்து கேட்டுகளில் நான்கு கேட்டுகள் பொது வழி பாதைகள் ஆகும். அந்தக் கேட்டுகள் மூடப்பட்டே உள்ளன.
அதில் தென்புறமுள்ள நுழைவாயில் கேட் அருகே பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.
நுழைவாயில் கதவுகள் திறக்கப்பட்டால் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள், பிரசவ பகுதி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகிகள் பலமுறை கூறியும் நுழைவு வாயில் கேட் மூடப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.