திண்டுக்கல்: தெப்பத்தில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன்

78பார்த்தது
திண்டுக்கல் நகரின் மத்தியில் பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான அபிராமி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவிழாவை முன்னிட்டு பத்மதீர்த்தம் எனும் கோட்டைக்குளத்தின் படித்துறையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பத்மகிரீஸ்வரர் ஞானாம்பிகை அபிராமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் அளித்தனர். பத்மகிரீஸ்வரர் உடனுறை அபிராமி அம்மன் எழுந்தருளிய தெப்பம் கோட்டைக்குளத்தில் 3 முறை வலம் வந்தது.அப்போது கோட்டைக்குளத்தை சுற்றி கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பஞ்சகவ்ய தீபத்தை விட்டு வழிபட்டனர்.

மேலும் ஏராளமான பக்தர்கள் பன்னீர் ரோஜா மலர்களை கோட்டைக்குளத்தில் தூவி வழிபட்டனர்.தெப்பத் திருவிழா நிறைவு பெற்றதும் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் மீண்டும் பல்லக்கில் புறப்பாடாகி, அபிராமி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அபிராமி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி வீரக்குமார் சண்முகவேல் நிர்மலா மலைச்சாமி திருக்கோவில் செயல் அலுவலர் தங்கலதா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி