மதுரை மஸ்தான்பட்டி டோல்கேட் அருகே நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இரட்டைக் கோரிக்கையான வப்பு ஒழிப்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் எழுச்சி பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. அதற்காக திண்டுக்கல்லில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் நத்தம் ரோடு ஜி. எம் மஹால் அருகே ஒன்றிணைந்து புறப்பட்டு சென்றனர்.