திண்டுக்கல் மாநகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று 22. 03. 2025.
புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்களை ஊராக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெத்துப்பட்டி, கன்னிவாடி, நிலக்கோட்டை, ஆத்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் 8 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.