திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்வு அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், அதிமுக அமைப்பு செயலாளர் மருதராஜ், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, பிரேம்குமார் உள்ளிட்ட அதிமுக மாவட்ட ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.