காரல் மார்க்சின் நினைவு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டச்செயலாளர் கே. பிரபாகரன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள்; தா. அஜாய்கோஷ், கே. ஆர். பாலாஜி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் முகேஷ், தீபக்ராஜ், கே. எஸ். கணேசன், பாலச்சந்திரபோஸ், திண்டுக்கல் மாநகரச்செயலாளர் ஏ. அரபுமுகமது, திண்டுக்கல் ஒன்றியச்செயலாளர் ஆர். சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சிபிஎம் அகில இந்திய மாநாட்டையொட்டி மாவட்டக்குழு அலுவலகத்தில் ஆர். சச்சிதானந்தம் கொடியேற்றினார்.