தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் தாண்டும் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க வீரர் ஜிதின் அர்ஜூனன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா திண்டுக்கல் ஜி. டி. என். கல்லுாரியில் நடந்தது. சங்க தலைவர் துரை தலைமை வகித்தார். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார்.
இந்திய தடகள சங்க இணை செயலாளர் லதா பேசினார். கல்லுாரி தாளாளர் ரெத்தினம், ராம்சன்ஸ் பள்ளி தலைவர் ராமசாமி, கபடி சங்க செயலாளர் சவடமுத்து, கால்பந்து கழக செயலாளர் சண்முகம் ஆகியோர் சாதனை படைத்த தடகள வீரர் ஜிதின் அர்ஜூனனை வாழ்த்தி ஒரு பவுன் தங்க நாணயம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதேபோல் வெள்ளிப்பதக்கங்களை வென்ற வைஸ்னவி, லிங்கேஸ்வரன், பால பிரசன்னா ஆகியோருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தடகள சங்க பொருளாளர் துரைராஜ், நாட்டண்மை காஜாமைதீன், பட்ஸ் பள்ளி தாளாளர் பொன்கார்த்திக்பங்கேற்றனர். முடிவில் சங்க செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.