திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் திருக்கோயில் மார்கழி மாதம் அதிகாலையில் கோவில் திறக்கப்படுவது பெண்கள் குடும்பத்தாருடன் வந்து வழிபாடு செய்வதும் இந்துக்களுடைய பெரு நம்பிக்கை.
அதிகாலையில் குளித்து அம்மனை தரிசனம் செய்ய வேண்டும் என்று மகிழ்ச்சியோடு கடும் குளிரில் வரக்கூடிய பெண் பக்தை ஒருவரை கையில் கம்பு வைத்துக் கொண்டு சீருடை அணியாத நபர் ஒருவர் கோவிலில் ஸ்வெட்டர் அணிந்து போகக்கூடாது என்று மிரட்டுகிறார். உடனடியாக பெண் பக்தரும் ஸ்வெட்டரை நீக்கி விடுகிறார்.
பெண் பக்தையை ஆபாசமான வார்த்தைகளால் இந்த வீடியோவில் காணும் நபர் மிரட்டுகிறார்.