கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, கொடைக்கானலுக்கு வார நாளில் 4000, வார இறுதியில் 6000 வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசுப்பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது. உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. இந்த கட்டுப்பாடுகள் ஜூன் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.