திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இம்மருத்துவ மலைக்கு திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் விபத்து பிரசவம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவமனை வருவது வழக்கம் தினந்தோறும் வெளிநோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் வரும் ஆறாவது வார்டில் சிகிச்சைக்காக காயம் அடைந்து வரும் நபருக்கு மருத்துவமனையில் பணி செய்யும் புஷ்பா என்பவர் மருந்து கட்டிவிட்டு அவரிடம் லஞ்சமாக பணம் வாங்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது
எந்த மருத்துவமனைகளிலும் லஞ்சம் வாங்கவில்லை எனக் கூறிவரும் மருத்துவ துறை திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லஞ்சத்திலேயே மூழ்கி இருப்பதும் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து வீடியோ வைரலாகியதில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர் புஷ்பாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.