திண்டுக்கல்: நாய்கள் கருத்தடை செய்யும் மையம் ஆய்வு

70பார்த்தது
திண்டுக்கல்: நாய்கள் கருத்தடை செய்யும் மையம் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு தொடர் முயற்சியாக திண்டுக்கல், சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள ABC சென்டர் என அழைக்கப்படும் நாய்கள் கருத்தடை செய்யும் மையத்தை மாநகர் நல அலுவலர், சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவர் குழுவினருடன் மேயர் இளமதிஜோதிபிரகாஷ் பார்வையிட்டார். 

ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய ரூபாய் 1,650 ஒதுக்கப்பட்டு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, கருத்தடைக்குப் பின் அதன் நடவடிக்கைகளை கண்காணித்து, முறையாக பராமரிக்கும் நடவடிக்கைகளை மருத்துவர்கள் விளக்கிக் கூறினார்கள். திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள அனைத்து நாய்களையும் பிடித்து, கருத்தடை செய்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான இதை விரைந்து முடிக்கும்படி மருத்துவர்களையும், சுகாதார அதிகாரிகளையும் மேயர் இளமதிஜோதிபிரகாஷ் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி