திண்டுக்கல்: திமுகவினர் அண்ணாமலையின் போஸ்டர் ஒட்ட முயற்சி

66பார்த்தது
திண்டுக்கல் கொட்டப்பட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அங்கு பாஜகவைச் சேர்ந்த இரண்டு மகளிர் முதல்வர் மு க ஸ்டாலின் போஸ்டரை ஒட்டி மதுபானக் கடைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மதுபான கடையில் கோஷங்கள் எழுப்பிய பாஜக மாவட்ட துணைத் தலைவர்களான மல்லிகா உமாமகேஸ்வரி ஆகிய இருவரையும் திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

 இந்நிலையில் அதே மதுபான கடையில் திமுக சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் போஸ்டர் ஒட்டுவதற்காக ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அண்ணாமலையின் போஸ்டரை ஒட்டினால் கைது செய்வோம் என அறிவித்தார். அதனை எடுத்து போஸ்டர் ஒட்டுவதை தவிர்த்து பாஜகவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து விட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி