திண்டுக்கல் மாவட்டத்தில், கோடை விடுமுறை வர இருக்கும் நிலையில், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிப்பதையும், பாழடைந்த கிணறுகள், கைவிடப்பட்ட கற்குவாரிகள், ஆற்றுப்பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர், ஏரி, குளம், குட்டைகள், தடுப்பணைகள் ஆகிய பகுதிகளில் அதன் ஆழம் அறியாமல் குழந்தைகள் மேற்படி இடங்களுக்கு துணி துவைக்கவும், குளிக்கவும் செல்வதை தவிர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுறுத்தியும், மேற்கூறிய இடங்களில் குளிக்க செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், ஆங்காங்கே இருக்கும் பொதுமக்களும், இளைஞர்களும் தங்கள் கிராமப்புற பகுதியில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன், தீயணைப்புத் துறையினருக்கு (இலவச எண்: 101), காவல் துறையினருக்கு (இலவச எண்: 100), மருத்துவதுறையை அழைக்க (இலவச எண்: 108) என்ற 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் தேவையற்ற நடமாட்டத்தை தடுத்து எவ்வித அசம்பாவிதம் ஏற்படுவதை தடுத்திட பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.