திண்டுக்கல்: வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

71பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திறகுட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சி, இராமையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், காலை உணவு திட்டம் சமையலறை மற்றும் பொருட்கள் வைப்பறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராமின் அவாஷ் யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகள் மற்றும் மற்றும் இராமையம்பட்டி குளத்தை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் பாண்டியராஜன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாத்துறை, ராஜசேகர், பொறியாளர் பாலசுப்பிரமணி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி