திண்டுக்கல் மாநகராட்சி விவேகானந்த நகர் பூங்காவில் நடைபெறும் மராமத்துப் பணி குறித்தும், கென்னடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுதல் மற்றும் கட்டுமானப் பணி குறித்தும், KMS நகர் நுண்ணுரம் செயலாக்க மையத்தின் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உடன் மாநகர பொறியாளர் (பொ), மாநகர நலஅலுவலர், உதவிப் பொறியாளர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.