திண்டுக்கல்: தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஆட்சியர்

70பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் நெகிழி கழிவு மேலாண்மை அலகில் பணிபுரியும் 35 தூய்மை பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் பரிசுகளை வழங்கி கௌரவித்து ஊக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி, முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி