திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள நேரு பவன் குப்புசாமி ஐயர் வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்தோபர் ஐக்கிய பெருவிழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு, கிறிஸ்தவ மக்கள் முன்னணி இணைந்து நடத்திய இந்த கிறிஸ்துமஸ் ஐக்கிய பெருவிழாவில் மும்மதத்தைச் சேர்ந்தவர்களுடன் புத்த மதத்தைச் சேர்ந்த பிக்குவும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் ஐக்கிய பெருவிழாவில் மேலிட பார்வையாளர்கள் டேன் சுப்பிரமணி, மணிமாறன், பங்குத்தந்தை மரிய இன்னாசி, பங்கு தந்தை அமல தாஸ், புத்த பிக்கு ஜீவ சங்கமித்ரன், கிறிஸ்தவ மக்கள் முன்னணி சங்க தலைவர் மரிய ஆரோக்கியம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிக் அலி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கிறிஸ்துமஸ் ஐக்கிய பெருவிழாவில் கலந்து கொண்டனர்.