திண்டுக்கல்: கிறிஸ்து பிறப்பு பெருவிழா

50பார்த்தது
வருடம் தோறும் டிசம்பர் 25ஆம் தேதியை கிறிஸ்மஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் 24 ஆம் தேதி நள்ளிரவு சிறப்பு கிறிஸ்துமஸ் கூட்டுத் திருப்பலி நடைபெறும். திண்டுக்கல் மறை மாவட்ட புனித வலனார் பேராலயத்தில் மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் நடுவே நள்ளிரவு சரியாக 12 மணிக்கு *இதயத்தில் குழந்தை இயேசு* பிறப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த கிறிஸ்துமஸ் திருப்பலியில் பங்குத்தந்தை அருட்திரு மரிய இன்னாசி, உதவி பங்கு தந்தையர்கள். அருட் சகோதரிகள், பங்கு மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி