திண்டுக்கல்: கிறிஸ்துவ வன்னியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கிறிஸ்துவ வன்னியர்கள் கூட்டமைப்பு சார்பாக கிறிஸ்துவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ்பாலுசாமி கலந்து கொண்டார்


ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த ஆயர்

தமிழகம் முழுவதும் சுமார் 5 முதல் 6லட்சம் கிறிஸ்தவ வன்னியர்கள் உள்ளனர்.
தற்போது வரை அனைத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

இந்து வன்னியர்களுக்கு வழங்கியது போல் கிறிஸ்துவ வன்னியர்களையும் MBC பட்டியலில் இணைக்க வேண்டும் என தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்களது மக்களை கண்டுகொள்வது இல்லை

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வடமதுரை யில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிறிஸ்துவ வன்னியர்களை MBC பட்டியலில் இணைப்பதற்கு பரிந்துரை செய்வோம் என தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது கூறினார். இந் நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

தமிழக முதல்வர் கிறிஸ்துவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்

மேலும் இந்து வன்னியர்களுக்கு நாங்கள் எதிரி இல்லை அவர்களைப் போல் நாங்களும் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி