திண்டுக்கல்: கிறிஸ்தவ போதகர்கள் எஸ். பி-யிடம் புகார் மனு

79பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 80 கிறிஸ்தவ மத போதகர்களும் அவர்களைச் சார்ந்த சபைகளில் மக்கள் சுமார் 15, 000 பேர் உள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக எங்கள் மத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் ஆராதனைகளுக்கு எதிராக சிலரும் அவர்களோடு சில இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் நடத்தி வரும் வழிபாடுகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பத்திரிக்கை செய்திகளும், சுவரொட்டி விளம்பரங்களும், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளும் மற்றும் காவல்துறையில் அடிப்படை ஆதாரமற்ற பொய் புகார்கள் அளித்து வருகின்றனர். மேற்கண்ட செயல்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அராஜகமான மற்றும் உரிமையை பாதிக்கும் வகையிலான அரசியல் சட்டங்களுக்கு விரோதமான செயல்பாடுகள் ஆகும். எனவே தங்களது வழிப்பாட்டு தளங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மற்றும் தங்களது வழிப்பாட்டு தளங்களில் உள்ள ஒலிபெருக்கி மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் சுமார் 30க்கும் மேற்பட்ட மத போதகர்கள் கொண்ட கிறிஸ்தவ போதகர் ஐக்கியம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். குறிப்பாக இது குறித்து நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி