திண்டுக்கல் குருசாமி பிள்ளை சந்தில் மருத்துவ விற்பனை பிரதிநிதி ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக கடையின் முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது இருசக்கர வாகனம் மீது அவர் கொண்டு வந்த பேக்கை வைத்துவிட்டு கடைக்குள் நுழைந்தார். நீண்ட நேரமாக அதை கவனித்த ஒரு இளைஞர் அருகே இருந்த ஆட்கள் அசரும் வரை காத்திருந்து இருசக்கர வாகனம் மீது வைத்திருந்த பேக்கை திருடிச் சென்றார். மருத்துவ விற்பனையாளர் வெளியே வந்த பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த பேக்கை காணவில்லை. உடனே அருகில் இருந்த சிசிடிவி காட்சியை சோதனை செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் பேக்கை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. உடனே திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.